உள்ளூர் செய்திகள்

சாராய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

Published On 2023-12-02 10:16 GMT   |   Update On 2023-12-02 10:16 GMT
  • வருகிற 12-ந்தேதி நடக்கிறது
  • முன் பணமாக ரூ.2 ஆயிரம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்

வேங்கிக்கால்:

திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் துறையால் சாராய வழக்குகளில் பலவகையான 100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் வருகிற 12-ந் தேதி காலை 10 மணிக்கு திருவண்ணா மலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது.

பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்ப முள்ளவர்கள் டிசம்பர் 10 மற்றும் 11-ந் தேதிகளில் நுழைவு கட்டணமாக ரூ.100, முன் பணமாக ரூ.2 ஆயிரம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.

ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் 18 சதவிகித ஜி.எஸ்.டி. வரியை சேர்த்து உடனடியாக செலுத்த வேண்டும். ஏலம் எடுக்கப்பட்ட வாகனத்திற்கு அதற்கான ரசீதே வாகனத்தின் உரிமை ஆவணமாகும்.

பொது ஏலம் குறித்து கூடுதல் விபரங்களை அறிய திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரிலோ அல்லது 04175 233920 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News