பாழடைந்த அரசு கட்டிடங்களை இடிக்க கலெக்டர் உத்தரவு
- அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது
- வட்டாட்சியர்கள் தன்னார்வலர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவ லர்களுடனான ஆய்வு கூட்டம் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.
கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் பேசியதாவது:-
வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையினர் வெள்ளம் பாதிக்க கூடிய பகுதிகளை கள ஆய்வு செய்து நிவாரண பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.
உயிர் காக்கும் உபகர ணங்கள் மற்றும் மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நெடுஞ்சா லைத்துறை பாலங்கள் மற்றும் மதகுகளை சுத்தம் செய்து தடையில்லா நீரோட்டத்திற்கு தேவை யான வழிகளை ஏற்படுத்த வேண்டும்.
வட்டாட்சியர்கள் தன்னார்வலர்களையும், ஆப்தமித்ரா தன்னார்வ லர்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இயற்கை இடர்பாடு களால் இறக்கும் கால்நடைகளுக்கு 48 மணி நேரத்தில் நிவாரண உதவிகள் வழங்க ஏதுவாக கால்நடை பராம ரிப்புத்துறை கால்நடை களுக்கான பிரேத பரிசோதனை அறிக்கையை உடனடியாக வழங்க வேண்டும்.
சேதமடைந்த பொது கட்டிடம், பாழடைந்த கட்டிடங்கள், பள்ளிகள், கல்லூரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பேருந்து நிலையங்கள், நீர்தேக்க தொட்டிகள் ஆகியவற்றை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, நேர்முக உதவியாளர் வெற்றிவேல், சப்-கலெக்டர் அனாமிகா, உதவி கலெக்டர்கள் மந்தாகினி, தனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.