உள்ளூர் செய்திகள்
மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
- ஆரணி தாலுகா போலீசில் ஒப்படைப்பு
- வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆற்றில் மணல் கொள்ளை அதிகம் நடப்பதாக தாசில்தார் மஞ்சுளாவுக்கு புகார் வந்தது. அதன் பேரில் தாசில்தார் மஞ்சுளா மற்றும் அதிகாரிகள் ஆகாரம் கிராமத்திற்கு உட்பட்ட ஆற்றில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த 3 பேரை மடக்கினர். அதிகாரிகளை பார்த்ததும் அவர்கள் வண்டியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதனையடுத்து அதிகாரிகள் மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, ஆரணி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியுடைய நெசல் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன், முனுகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் பரசுராமன் ஆகியோரை தேடி வருகின்றனர்.