உள்ளூர் செய்திகள்
- செங்கம் வட்டத்தில் தடுப்பூசி முகாம்
- மாடுகள் உயிரிழப்பை தடுக்க நடவடிக்கை
புதுப்பாளையம்:
செங்கம் சுற்றுவட்ட பகுதிகளில் பசு மாடுகள் அதிக அளவில் கிராமப்புறங்களில் விவசாயிகள் வளர்த்து பராமரித்தும் துணை தொழிலாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மாடுகளுக்கு கோமாரி நோய் தொற்று பரவி மாடுகள் உயிரிழப்பதால் மாடுகள் வளர்ப்போர் மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகின்றனர்.
இந்நிலையில் செங்கம் வட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தற்போது ஒவ்வொரு கிராமங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று கரியமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மேல்கரிய மங்கலம் அண்டப்பேட்டை உள்ளிட்ட கிராம பகுதிகளில் கோமாரிநோய் தடுப்பு ஊசி முகாம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் செங்கம் கால்நடை மருத்துவமனை மருத்துவர் சிவரஞ்சனி தலைமையில் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.