உள்ளூர் செய்திகள்

நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறிய காட்சி.

தூய்மை பணியாளர்களுக்கு விருந்து

Published On 2023-11-29 08:30 GMT   |   Update On 2023-11-29 08:30 GMT
  • திருவண்ணாமலை தீப திருவிழாவில் பணியாற்றியவர்கள்
  • நகராட்சி சார்பில் வழங்கப்பட்டது

வேங்கிக்கால்:

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடந்து முடிந்தது.

கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்ட நவம்பர் 26-ந் தேதி மற்றும் 3 நாட்களில் அண்ணாமலையை 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வலம் வந்து வழிபட்டனர்.

திருவண்ணாமலை நகராட்சி சார்பில் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த பணிக்காக ஆற்காடு, அரக்கோணம், திருவத்திபுரம், வந்தவாசி, திண்டிவனம், ஆரணி, வாலாஜாபேட்டை, விழுப்புரம், குடியாத்தம், வாணியம்பாடி, ராணிப்பேட்டை, ஜோலார்பேட்டை, கள்ளக்கு றிச்சி, பேரணாம்பட்டு, மேல்விஷாரம், சோளிங்கர், உளுந்தூர்பேட்டை, ஆம்பூர், திருப்பத்தூர் ஆகிய நகராட்சிகளில் இருந்து தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.

இவர்களுடன் திருவண்ணாமலை நகராட்சியை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் இணைந்து கார்த்திகை தீபத்திருவிழா தூய்மை பணிகளை வெகு சிறப்பான முறையில் செய்தனர்.

உடனுக்குடன் குப்பைகளை அகற்றி திருவண்ணாமலை நகரையும், கிரிவலப் பாதையையும் சுத்தமாக வைத்திருந்த நகராட்சி தூய்மை காவலர்களை பொதுமக்கள், ஆன்மிக பக்தர்கள் பாராட்டி சென்றனர்.

நகராட்சி பணியாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணியை பாராட்டிய திருவண்ணா மலை நகராட்சி நிர்வாகம் அவர்களுக்கு விருந்தளித்தனர்.

நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், வேலூர் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் தனலட்சுமி ஆகியோர் தங்கள் கைகளால் உணவு பரிமாறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் ப.கார்த்தி வேல்மாறன், நகர மன்ற துணைத் தலைவர் சு.ராஜாங்கம், பொறியாளர் நீலேஸ்வர், உதவி பொறியாளர் ரவி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News