ரேணுகாம்பாள் கோவிலில் நவராத்திரி விழா
- உற்சவ அம்மன் கொலு வைத்து அலங்காரம்
- பாரிவேட்டை உற்சவத்துடன் அம்மன் திருவீதி உலா
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் நவராத்திரி திருவிழா வருகிற 15-ந் தேதி தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. இதைமுன்னிட்டு கோவில் மண்டபத்தில் உற்சவ அம்மன் கொலு வைத்து, 15-ந்தேதி பார்வதி அலங்காரமும், 16-ந்தேதி காமாட்சி அலங்காரமும், 17-ந் தேதி மாவடி சேவை அலங்காரமும், 18-ந் தேதி ஸ்ரீமீனாட்சி அலங்காரமும்,
19-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 20-ந் தேதி துர்காதேவி அலங்காரமும், 21-ந் தேதி ஸ்ரீஅன்னபூரணி அலங்காரமும், 22-ந் தேதி தனலட்சுமி அலங்காரமும், 23-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 24-ந் தேதி திருஅவதார அலங்காரமும் செய்யப்பட்டு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை யும் நடக்கிறது. பாரிவேட்டை உற்சவத்துடன் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.
இந்த விழாவில் கலந்து கொண்டு லட்சார்ச்சனை செய்யும் பக்தர்களுக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்ஷன், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.