உள்ளூர் செய்திகள்

நிதி நிறுவனத்தில் இருந்து பொதுமக்கள் பொருட்களை அள்ளி சென்ற காட்சி.

நிதி நிறுவனத்தில் பொருட்களை அள்ளி சென்ற பொதுமக்கள்

Published On 2023-11-10 08:21 GMT   |   Update On 2023-11-10 08:21 GMT
  • அடித்து நொறுக்கியதால் பரபரப்பு
  • தீபாவளி சீட்டு நடத்தி மோசடி

செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் காஞ்சிபுரம் சாலையில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இதன் கிளைகள் ஆரணி மற்றும் வந்தவாசியில் செயல்படுகிறது. இந்த நிதி நிறுவனத்தில் தீபாவளி சீட்டு நடத்தி வந்தனர்.

இதில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள தருவதாக கூறி இருந்தனர். இதனால் வந்தவாசி, ஆரணி, செய்யாறு பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இந்த நிதி நிறுவனத்தில் சீட்டு கட்டினர். சீட்டு முடிந்ததால் பொருட்களை வாங்கு வதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு பொதுமக்கள் நிதி நிறுவன உரிமையாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டனர்.

இதற்கு உரிமையாளர் பொருட்களை தருவதாக கூறி பணம் கட்டியவர்களை அலைக்கழித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் செய்யாறில் உள்ள தலைமை நிதி நிறுவனத்திற்கு ஆரணி, வந்தவாசி, செய்யாறை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வந்தனர். அப்போது அந்த நிதி நிறுவனம் பூட்ட பட்டு இருந்தது.

அள்ளி சென்றனர்

இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து அந்த நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. மேலும் பொதுமக்கள் சிலர் பீரோ உள்ளிட்ட பொருட்களை பைக் மற்றும் வாகனங்களில் எடுத்து சென்றனர்.

இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News