உள்ளூர் செய்திகள்

எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்

Published On 2023-08-13 08:45 GMT   |   Update On 2023-08-13 08:45 GMT
  • மருத்துவ குழுவினர் முகாமிட்டிருந்தனர்
  • 350-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்று ஓடின

ஆரணி:

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சிறுமூரில் உள்ள ஸ்ரீ சிறுபாத்தம்மன் கோவிலில் ஆடி 4-ம் வெள்ளி திருவிழா கோலாகலமாக நடந்தது.

இதனையொட்டி இன்று எருது விடும் திருவிழா நடந்தது. விழா நடந்த வீதியின் இருபுறமும் மரக்கட்டைகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்க ப்பட்டிருதது. சாலை நடுவே மண் கொட்டப்பட்டிருந்தன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர், காவல்துறை மற்றும் மருத்துவ குழுவினர் விழா நடைபெறும் இடத்தில் முகாமிட்டிருந்தனர்.

காளைகளை அதன் உரிமையாளர்கள் வண்ண, வண்ண பூக்களை கொண்டு அலங்கரித்து அழைத்து வந்தனர். இந்த நிலையில் காலை 7 மணி அளவில் வீதி காண்பிக்கும் நிகழ்ச்சியும், 8 மணியளவில் எருது விடும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்று ஓடின.

தெருவில் சீறிபாய்ந்து ஓடிய காளைகளை, பார்வையாளர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்து விரட்டினர்.

Tags:    

Similar News