உள்ளூர் செய்திகள்
- 5,000 வாழை மரங்கள் சேதமானது
- விவசாயிகளுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வலியுறுத்தல்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. அதிவேகமாக சூறைக்காற்று வீசியதில் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதமடைந்தது நாசமானது.
இதில் குறிப்பாக வேதாஜிபுரம் பகுதியைச் சேர்ந்த கேசவன், சேகர், ராஜேந்திரன் உள்பட 5-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிரிட்டிருந்த சுமார் 5 ஆயிரம் வாழை மரங்கள் பாதியில் முறிந்தும், வேரோடு சாய்ந்தும் நாசமடைந்துள்ளது.
இதனால் அப்பகுதி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பை ஈடுபடுத்தும் வகையில் அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.