போட்டி போட்டு இளவட்டகல் தூக்கிய இளம்பெண்கள்
- கல்லை தூக்கினால் திருமணமாகும் என அறிவிக்கப்பட்டது
- ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் உணவுத் திருவிழா நடைபெற்றது.
இதில் இயற்கை முறையில் விளைவிக்கும் காய்கறிகள், அரிசி வகைகள், உணவு தானியங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது.
இதில் ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான இயற்கை உணவுப் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
மேலும் இளைஞர்கள் விளையாட்டு களம் என்ற பெயரில் இளவட்டக்கல் தூக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான இளைஞர்கள் மற்றும் இளம்பெ ண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இந்த இள வட்டக்கல் தூக்கு பவர்கள் யாராக இருந்தாலும் இந்த ஆண்டே திருமணமாகும் என ஒலிபெருக்கியில் அறிவித்தபடி இருந்தனர். இதில் ஏராளமான இளம்பெண்கள் ஆர்வத்துடன் போட்டி போட்டு தூக்கினர்.
இளவட்டக்கலை பெண் ஒருவர் ஆர்வமுடன் தூக்கும்போது, அவரது நண்பர்கள் செல்போனில் படம் பிடித்து கொண்டனர்.
அதேபோல் இளவட்டக்கலை சில சிறுவர்களும் தூக்க முயன்றனர்.