ஆசிரியர்களுக்கு 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி முகாம்
- மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்றாற்போல் தமிழ் , ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகியப் படங்களை கதை, பாடல், படித்தல் , எழுத்தல் ஆகியவை மூலமாக கற்பிப்பது தொடர்பான பயிற்சிகள் நடைபெறுகிறது.
- 2022-23ஆம் ஆண்டில் இருந்து ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் , வலங்கைமான் ஒன்றியத்தில் பணியாற்றும் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பணியாற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி நடந்து வருகிறது.
முதல் நாள் பயிற்சியை வட்டாரக் கல்வி அலுவலர் ஜெயலெட்சுமி , வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இப்பயிற்சியில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை அரும்பு , மொட்டு , மலர் என மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அம்மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்றாற்போல் தமிழ் , ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகியப் படங்களை கதை, பாடல், படித்தல் , எழுத்தல் ஆகியவை மூலமாக கற்பிப்பது தொடர்பான பயிற்சிகள் நடைபெறுகிறது.
இப்பயிற்சியை திருவாரூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல் பார்வையிட்டார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1, 2, 3 வகுப்புகளுக்கு 2022-23ஆம் ஆண்டில் இருந்து 'எண்ணும் எழுத்தும்' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் 2025 ஆம் ஆண்டிற்க்குள் அனைத்து தொடக்கப் பள்ளி மாணவர்களும் படித்தல் , எழுதுதுதலில், கணக்கீடு செய்தல் ஆகிவற்றில் குறிப்பிட்ட திறனை அடைய கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது.