மாயூரநாதர் கோவிலில் திருவாவடுதுறை ஆதீனம் சாமி தரிசனம்
- பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின.
- மாயூரநாதர் கோவிலில் செப்டம்பர் மாதம் 3-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறும்.
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அபயாம்பிகை உடனாகிய மாயூரநாதர் கோயில் உள்ளது.
இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு 2022 ஆம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கின.
தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
நேற்று திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமாக சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் கோயிலில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.
மகா பூர்ணாகுதியில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், மாயூரநாதர் கோவிலில் செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் சிவ பாடகசாலை சிவாச்சாரியார் சுவாமிநாதன், ஆதீனம் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கனேசன், காசாளர் வெங்கடேசன் மற்றும் ஆன்மீக பொறுப்பாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.