உள்ளூர் செய்திகள்

செயற்குழு கூட்டத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் பேசிய போது எடுத்த படம்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட விடுதலைசிறுத்தைகள் கட்சி செயற்குழு கூட்டம்

Published On 2022-06-28 08:12 GMT   |   Update On 2022-06-28 08:12 GMT
  • மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
  • அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலை அமைத்து தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திருச்செந்தூர்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் திருச்செந்தூரில் நடைபெற்றது.

இதில் மாவட்ட துணைச் செயலாளர் இந்திரா, நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜ்குமார், திருவைகுண்டம் சட்ட மன்ற தொகுதி செயலாளர் திருவள்ளுவன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி, சமூக நல்லிணக்கப்பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ்ப்பரிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளரக கருத்தியல் பரப்பு மாநில துணைச் செயலாளர் தமிழ்குட்டி, தொண்டர் அணி மாநில துணை செயலாளர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

திருச்செந்தூர் நகராட்சி டாக்டர் அம்பேத்கர் நினைவு பூங்காவில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலை அரசின் செலவில் அமைத்து தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாடாளுமன்ற தொகுதி செயலாளர் மணி கண்டராசா, திருச்செந்தூர் ஒன்றிய துணை செயலாளர்கள் செஞ்சுடர், ஆட்டோ கண்ணன், திருவைகுண்டம் ஒன்றிய துணை செயலாளர் கனிபாண்டியன், ஆழ்வை ஒன்றிய பொருளாளர் செல்வக்குமார், ஒன்றிய துணை செயலாளர்கள் முத்துக்குமார், சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர். சமூக நல்லி ணக்கப்பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் இளந்தளிர்முத்து நன்றி கூறினார்.

Tags:    

Similar News