உள்ளூர் செய்திகள்

தருமபுரி அமரர் சேவை மூலம் 25-வது ஆதரவற்றவர் உடல் அடக்கம்

Published On 2022-11-28 09:38 GMT   |   Update On 2022-11-28 09:38 GMT
  • காவல்துறை உதவியுடன் அனுமதி பெற்று நல்லடக்கம் செய்து வருகின்றனர்.
  • தருமபுரி அமரர் சேவை மூலம் 25 சடலங்களை நல்லடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பி டதக்கது.

தருமபுரி,

ஆதரவற்றோர், ஏழ்மையில் இறந்தவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய தருமபுரி அமரர் சேவை என்ற அமைப்பை உருவாக்கி அரசு மருத்துவமனையில் வைக்கப்படும் ஆதரவற்று இறந்தோரின் உடல்களை காவல்துறை உதவியுடன் அனுமதி பெற்று நல்லடக்கம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் போலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 2 நபர்கள் விபத்தில் சிக்கி மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி இரண்டு நபர்களும் இறந்த நிலையில் அவர்களைப் பற்றிய முழு விவரம் கிடைக்காத தால் தருமபுரி அமரர் சேவை மூலம் நிர்வாகிகள் சதீஸ்குமார், தமிழ்செல்வன், விஜயகாந்த், அலெக்சா ண்டர், சசி, தமிழரசன் ஆகியோர் இரண்டு உடல்களையும் நல்லடக்கம் செய்தனர். இது வரை தருமபுரி அமரர் சேவை மூலம் 25 சடலங்களை நல்லடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பி டதக்கது.

Tags:    

Similar News