உள்ளூர் செய்திகள்

உண்டியல் எண்ணும் பணியை அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் பார்வையிட்ட போது எடுத்த படம்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியல் மூலம் ரூ.3 கோடி காணிக்கை

Published On 2023-07-26 09:08 GMT   |   Update On 2023-07-26 09:08 GMT
  • சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுலம் வேத பாடசாலை உழவார ப்பணி குழுவினர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
  • உலோகங்கள் தங்கம் 1 கிலோ 900 கிராம், வெள்ளி 29 கிலோ, பித்தளை 30 கிலோ , செம்பு 10 கிலோ, தகரம் 3.5 கிலோ மற்றும் அயல் நோட்டு 552-ம் இருந்தது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் ஜூலை மாத உண்டியில் எண்ணிக்கை கடந்த 2 நாட்களாக கோவில் வசந்த மண்டபத்தில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமையில் இணை ஆணையர் கார்த்திக் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுலம் வேத பாடசாலை உழவார ப்பணி குழுவினர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ. 2 கோடியே 90 லட்சத்தி 30 ஆயிரத்து 175-ம், கோசாலை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ. 13 ஆயிரத்து 621, யானை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ. 91 ஆயிரத்து 790, அன்னதானம் உண்டியல் மூலம் ரூ. 18 லட்சத்து 21 ஆயிரத்து 342, மேலக்கோவில் உண்டியலில் ரூ. 14 ஆயிரத்து 944-ம் சேர்த்து மொத்தம் ரூ. 3கோடியே 9 லட்சத்து 71 ஆயிரத்து 872 கிடைத்தது. இது போக உலோகங்கள் தங்கம் 1 கிலோ 900 கிராம், வெள்ளி 29 கிலோ, பித்தளை 30 கிலோ , செம்பு 10 கிலோ, தகரம் 3.5 கிலோ மற்றும் அயல் நோட்டு 552-ம் இருந்தது.

உண்டியல் எண்ணும் பணியில் அறங்காவலர் குழு தலைவரின் நேர்முக உதவி யாளர் செந்தமிழ் பாண்டியன், இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், திருச்செந்தூர் ஆய்வா ளர் செந்தில் நாயகி, தூத்துக்குடி ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணி குழுவினர்கள், பொதுமக்கள் பிரதிநிதி யாக வேலா ண்டி,கருப்பன், மோகன் அயல் பணி மற்றும் திருக்கோ யில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News