உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர்.

ஐயாறப்பர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

Published On 2022-11-01 09:20 GMT   |   Update On 2022-11-01 09:20 GMT
  • சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.
  • மூவரையும் பொன்னூஞ்சலில் எழுந்தருள செய்து, ஊஞ்சல் பாடல்கள் பாடப்பட்டன.

திருவையாறு:

தருமையாதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் தனிச் சன்னிதி கொண்டுள்ள சுப்பிரமணியர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நேற்றிரவு நடந்தது.

நேற்று முன்தினம் சூரசம்ஹார விழா நடந்ததைத் தொடந்து நேற்றிரவு சுப்பிரமணியருக்கு வள்ளி மற்றும் தெய்வானை ஆகியோருடன் கல்யாண உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று சுப்பிரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது.

இதனைத் தொட.ர்ந்து சன்னிதியில் அலங்கரிக்கப்பட்ட மணவறையில் சுப்பிரமணியர் சுவாமியின் இருபக்கமும் வள்ளி மற்றும் தெய்வானை ஆகிய இருவரையும் மணக்கோலத்தில் எழுந்தருளச் செய்து, ஹோமங்கள் வளர்த்து, மூலிகைகள், தானியங்கள், பழம், பட்டு வஸ்திரம் முதலிய ஆகுதிகள் சமர்ப்பித்து, வேதபாராயணம் முதலிய மந்திரங்கள் பாடி, இரு மணமகள்களுக்கும் மங்கல நாண் பூட்டி சுப்பிரமணியர் சுவாமிக்கு திருமணம் செய்விக்கப்ட்டது. பின்னர் மூவரையும் பொன்னூஞ்சலில் எழுந்தருளச் செய்து, ஊஞ்சல் பாடல்கள் பாடப்பட்டன.

இத்திருமண வைபவத்தைக் கண்டு அருள்பெற்ற ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கும் அறுசுவை விருந்துடன் கல்யாண சாப்பாடு போடப்பட்டது. ஏற்பாடுகளை ஐயாறப்பர் கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.

Tags:    

Similar News