உள்ளூர் செய்திகள் (District)

அரசு பள்ளி மாணவர்களுக்கு 1 நாள் சுற்றுலா வாகனங்களை கலெக்டர் கொடி அசைத்து வழியனுப்பி  வைத்த காட்சி.

அரசு பள்ளி மாணவர்களுக்கு 1 நாள் சுற்றுலா

Published On 2023-10-30 09:42 GMT   |   Update On 2023-10-30 09:42 GMT
  • ஏலகிரி மலைக்கு அழைத்துச் செல்ல பள்ளி கல்வி துறை நடவடிக்கை
  • வாகனங்களை கலெக்டர் கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கி உள்ள மாணவர்களை 1 நாள் சுற்றுலாவாக ஏலகிரி மலைக்கு அழைத்துச் செல்ல பள்ளி கல்வி துறை நடவடிக்கை மேற்கொண்டது.

அதன்படி இன்று காலை சுற்றுலா சென்ற வாகனங்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார்.

அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News