நெக்னா மலையில் சாலை அமைக்க 16 கி.மீ. நடந்து கலெக்டர் ஆய்வு
- கிராம மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு
- கர்ப்பிணிகளை டோலிகட்டி தூக்கி செல்லும் அவலம்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நெக்னாமலை கிராமத்திற்கு சாலை வசதிகள் இல்லை.
சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்தே இந்த மலை கிராம மக்கள் 8 கிலோமீட்டர் தூரம் மலை காடுகள் வழியாக நடந்து செல்கின்றனர்.
மலையில் உள்ள கர்ப்பிணிகள் மற்றும் யாராவது நோய்வாய்ப்ப ட்டால் அவர்களை டோலிக்கட்டி தூக்கி செல்லும் அவல நிலை உள்ளது.
மேலும் மலையில் 5-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி உள்ளது. படிப்புக்காக மாணவ மாணவிகள் தினமும் சென்றுவர 16 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்லும் அவலம் நீடித்து வருகிறது.
மலை கிராமத்திற்கு சாலை வசதி அமைத்து தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அடிவாரத்தில் இருந்து கிராமத்திற்கு 8 கிலோமீட்டர் தூரம் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்ப ட்டுள்ளது. திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் இன்று காலை மலை கிராமத்திற்கு நடந்து சென்றார்.
சாலை அமைக்கும் பணிக்காக கலெக்டர் வந்திருப்பதை அறிந்த கிராம மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என கிராம மக்கள் தெரிவி த்தனர். கலெக்டருடன் மாவட்ட வன அலுவலர் கலாநிதி, உதவி கலெக்டர் பிரேமலதா, திட்ட இயக்குனர் செல்வகுரு ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரி ஆகியோர் உடன் இருந்தனர்.
மலைக்கு சென்று வர என 16 கிலோ மீட்டர் தூரம் கலெக்டர் நடந்து சென்று ஆய்வு செய்தார்.