உள்ளூர் செய்திகள் (District)

பலாத்கார வழக்கில் தகவல் தெரிவிக்காத 2 போலீசார் பணியிட மாற்றம்

Published On 2023-10-10 08:07 GMT   |   Update On 2023-10-10 08:07 GMT
  • போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு
  • அலட்சியமாக செயல்பட்டதால் நடவடிக்கை

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 5-ந் தேதி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்து கர்ப்பாக்கிய நபர்கள் மீது பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை புகார் அளித்தார்.

இதனை இன்ஸ்பெக்டர் சாந்தி முறையாக விசாரிக்காமல் ஊர் பஞ்சாயத்தாரர்களிடம் பேசி விட்டு வரும்படி கூறியதாக தெரிகிறது. இதனிடையே இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டதாக கூறப்படும் மாணிக்கம் என்பவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் ஆகியோர் வாணியம்பாடிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். புகார் குறித்து முறையாக விசாரணை செய்யாத இன்ஸ்பெக்டர் சாந்தி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்று போலீஸ் இன்ஸ்பெக்டராக மலர் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சாந்தி உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன்(85) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த புகார் குறித்து விவரங்களை தனிப்பிரிவு போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் தகவல் அளிக்க தவறியதாக தெரிகிறது.

மேலும் இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க அவர்கள் அலட்சியமாக செயல்பட்டதாக புகார்களும் எழுந்தது.

அதன்படி வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலைய தனி பிரிவு போலீசாக பணியாற்றி வந்த திங்களன், ஏலகிரி மலை போலீஸ் நிலையத்திற்க்கும், அம்பலூர் போலீஸ் நிலைய தனி பிரிவு போலீசாக பணியாற்றி வந்த ரமேஷ் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்திற்கும் பணியிடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News