உள்ளூர் செய்திகள்

சாராய வேட்டையில் 272 பேர் கைது

Published On 2023-07-06 09:01 GMT   |   Update On 2023-07-06 09:01 GMT
  • 384 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது
  • 14 தனிப்படையினர் ஈடுபட்டனர்

வேலூர்:

வேலூர் மாவட்டம் முழுவதும் சாராய தடுப்பு வேட்டை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் உள்ளூர் காவல் நிலைய போலீசார் மட்டு மின்றி 14 தனிப்படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள், மாவட்டத்தில் உள்ள அல்லேரி, சாத்கர், ஜார்தான்கொல்லை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் சாராய தடுப்பு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, வேலூர் மாவட்டம் முழுவதும் கடந்த மே 25-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை நடத்தப்பட்ட சாராய வேட்டையில் மொத்தம் 384 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 272 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமறைவான 112 பேரை தேடும் பணி தீவிரப்படுத்த ப்பட்டுள்ளது. இதுகுறித்து, வேலூர் மாவட்டகாவல் கண்காணிப்பாளர் போலீஸ் சூப்பிரண்டு மணி வண்ணன் கூறும்போது:-

"வேலூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட சாராய வியாபாரிகளில் தொடர்ந்து சட்ட விரோத செயலில் ஈடுபட்டுவந்த 15 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர்.

சாராய தடுப்பு வேட்டையின் மூலம் சுமார் 56 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல், 13 ஆயிரத்து 858 லிட்டர் சாராயம், 3 ஆயிரத்து 372 மதுபாட்டில்கள், சாராய ஊறலுக்கு பயன்படும் வெல்லம் சுமார் 5 ஆயிரத்து 110 கிலோ, வெள்ளை சர்க்கரை சுமார் 870 கிலோ, வேலம் பட்டை சுமார் 700 கிலோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

23 வாகனம் பறிமுதல்

சாராய கடத்தலுக்கு பயன்படுத்திய 23 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கும். வரை

சாராய தடுப்பு வேட்டையின் போது சுமார் ரூ.34 ஆயிரத்து 500 மதிப்பிலான சுமார் 3.5 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17பேர் கைது செய்யப்ப ட்டுள்ளனர். மாவட்டத்தில் கஞ்சா, சாராயம் காய்ச்சுவது, விற்பது போன்ற செயல்களை மேற்கொள்ள முடியாது என்று அவர்கள் உணரும் வரை சாராய தடுப்பு வேட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

ரூ.65 லட்சம் மறுவாழ்வு நிதி

வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சாராய தடுப்பு வேட்டையின் ஒரு பகுதியாக சாராய தொழிலில் ஈடுபட்டு மனம் திருந்துவோருக்கு மறுவாழ்வு நிதி பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தற்போது மனம் திருந்திய முன்னாள் மதுவிலக்கு குற்றவாளிகள் 219 பேருக்கு தலங் ரூ.30 ஆயிரம் வீதம் ரூ.65 லட்சம் மறுவாழ்வு நிதி வழங்க மாவட்டடி நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது" என்றார்.

Tags:    

Similar News