3 கி.மீ. தூரத்திற்கு அந்தரத்தில் பறந்து வந்து நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்
- பெண் பக்தர் 38 அடி வேல் குத்தி வந்தார்
- ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளியில் ஆடி மாதம் முதல் நாளை முன்னிட்டு 3 கிலோமீட்டர் அந்தரத்தில் தொங்கி வந்து பக்தர் ஒருவர் நேர்த்திக்கடன் செலுத்தினார்.
நாட்டறம்பள்ளி பகுதியில் பிரசித்தி பெற்ற முருகர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆடி மாதம் முதல் நாளில் நாட்றம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருவது வழக்கம்.
இந்த நிலையில் ஆடி மாதம் முதல் நாளான நேற்று நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் முருகர் கோவிலுக்கு நேர்த்திக்கடனை செலுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நாட்டறம்பள்ளி அடுத்த கத்தாரி பகுதியைச் சேர்ந்த முனிராஜ் என்ற பக்தர் கிரேன் மூலமாக தனது முதுகில் அலகு குத்தி சுமார் 3 கிலோமீட்டர் வரை அந்தரத்தில்தொங்கி வந்து முருகர் நேர்த்திக்கடன் செலுத்தினார்.
அதேபோல் மற்றொரு பெண் பக்தர் 38அடி வேல் குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். இதில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.