உள்ளூர் செய்திகள் (District)

8 கிலோ மீட்டர் நடைப்பயிற்சி

Published On 2023-11-03 08:22 GMT   |   Update On 2023-11-03 08:22 GMT
  • கலெக்டர் தகவல்
  • ‘நடப்போம் நலம் பெறுவோம்’ எனும் திட்டத்தை சட்டப்பேரவையில் அறிமுகம்

திருப்பத்தூர்:

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் ஆரோக்கியமாக வாழ்தலை நடைமுறைப்படுத்தும் வகையில், 'நடப்போம் நலம் பெறுவோம்' எனும் திட்டத்தை சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தினார்.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று 8 கிலோமீட்டர் தூரம் நடைபயிற்சியை மேற்கொள்ள நடைபாதைகள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டத்தை முதல்- அமைச்சர் நாளை 4-ந் தேதி காலை 6 மணியளவில் தொடங்கி வைக்கிறார். அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கலெக்டர் அலுவலகத்தில் இருந்து நடைப்பயிற்சி நடைபெறஉள்ளது.

அடிப்படை வசதிகள்

இது குறித்து திருப்பத்தூர் கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன் கூறியதாவது:-

கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கும் 8 கிலோமீட்டர் நடைப்பயிற்சி தூயநெஞ்சககல்லூரி மற்றும் பாச்சல் பத்மம் பாலிடெக்னிக் கல்லூரி வழியாக அச்சமங்கலம் ஆஞ்சநேயர் கோவிலை சென்று, பாச்சல் வழியாக மீண்டும் கலெக்டர் அலுவலகத்திலேயே முடிவடைகிறது. அந்த வழித்தடத்தில் குடிநீர், கழிவறை, அமருவதற்கு சாய்வு நாற்காலி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News