- தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்பு
- உரிமையாளரிடம் பசுமாடு ஒப்படைக்கப்பட்டது
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த பெரிய கம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரின் மகன் வினோத் குமார் இவர் வீட்டில் பசு மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் வீட்டின் அருகே உள்ள 80 அடி ஆழமுள்ள விவசாயி கிணற்று அருகே தனது பசு மாட்டை மேய்ச்சலுக்காக கட்டப்பட்ட இருந்தார். அப்போது பசு மாடு ஒன்று நேற்று கிணற்றில் திடீரென தவறி விழுந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வினோத்குமாரின் குடும்பத்தினர் இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை ஒரு மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர். பின்னர் மாட்டின் உரிமையாளரிடம் பசுமாடு ஒப்படைக்கப்பட்டன.