உள்ளூர் செய்திகள்

அர்மா மலை குகையை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்ட காட்சி.

அர்மா மலையில் சித்தன்னவாசல் ஓவியங்களுடன் பழங்கால குகை

Published On 2023-10-15 09:09 GMT   |   Update On 2023-10-15 09:09 GMT
  • விரைவில் நினைவுச் சின்னமாக அறிவிப்பு
  • ஓவியங்களில் கிளிகள் மற்றும் பலவிதமான பூக்கள் உள்ளன

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் நகருக்கு அருகில் மலையம்பட்டு கிராமத்தில் உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள அர்மா மலையில் 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண குகை அமைந்துள்ளது.

மாவட்டத்தின் ஒரே பழங்கால குகை

இது இந்த மாவட்டத்தின் ஒரே நினைவுச் சின்னமான பழங்கால குகையாகும்.

இது மலையடிவாரத்தில் இருந்து 100 அடி உயரத்தில் 100 கிரானைட் படிக்கட்டுக ளுடன் அமைந்துள்ளது.

மேலும் இந்தக் குகை பல அறைகளாக பிரிக்கப்பட்டு மண் மற்றும் சுடப்படாத செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு 3000 சதுர அடியாக உள்ளது.

இந்தக் குகையின் கூரை மற்றும் சுவர்களில் அழகிய சுவர் ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியங்கள் சமண மற்றும் அஸ்ததிக் பாலர்க ளின் கதைகளை சித்தரிப்ப தாக உள்ளது.

பெரும்பாலான ஓவியங்களில் கிளிகள் மற்றும் பலவிதமான பூக்கள் உள்ளன.

சித்தன்னவாசல் குகையை ஒத்து உள்ளது

இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது :-

குகை ஓவியங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் குகை ஒத்துள்ளது.

இந்தப் குகை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.20 லட்சம் செலவில் தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது உடைந்த கிரானைட் படிக்கட்டுகள் சரி செய்யப்பட்டன. நினைவு சின்னங்கள் சேத மடையாமல் இருக்க வேலி அமைக்கப்பட்டது.

இதன் வரலாறு பற்றிய அறிவிப்பு பலகைகளும் நிறுவப்பட்டது. மேலும் இது விரைவில் மாநில அரசால் நினைவு சின்ன மாக அறிவிக்கப்படும் என்றனர்.

இந்நிலையில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அப்பகுதியில் ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது :-

குகையை பாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது. தற்போது வரை சுவர்களில்உள்ள அமைப்பு மற்றும் சுவரொ வியங்கள் மாறாமல் உள்ளன.

மலையால் மூடப்பட்டி ருக்கும் சரியான பகுதியை மதிப்பிடுவதற்காக மலைப்பகுதியின் விரிவான ஆய்வுக்கு உத்தரவி டப்பட்டுள்ளது.

மேலும் இந்த மலைப்பகுதி அடர்ந்த காப்புக்காடுகளுடன் 74.94 ஹெக்டேர் பரப்பளவில் பரவியுள்ளது என்றார்.

Tags:    

Similar News