உள்ளூர் செய்திகள்

வெள்ள அபாயம் ஏற்பட்டால் மீட்பு பணிக்கு தயாராக இருக்க வேண்டும்

Published On 2022-12-10 09:32 GMT   |   Update On 2022-12-10 09:32 GMT
  • உதவி கலெக்டர் எச்சரிக்கை
  • அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாண்டஸ் புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக திருப்பத்தூர் வட்டார அளவிலான பேரிடர் மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் திருப்பத்தூர் சப்- கலெக்டர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் லட்சுமி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் அவர் பேசுகையில் கால்வாய்களில் அடைப்புகள் காணப்பட்டாலோ, ஏரிகளின் மதகுகள் பழுதடைந்த நிலையில் இருந்தாலோ, வெள்ள அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டலோ அவை குறித்து விரிவான அறிக்கையினை அந்த பகுதி தாசில்தாருக்கும், மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமை அலுவலகத்திற்கும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். வெள்ள அபாயம் ஏற்பட்டால் உடனடியான மீட்பு பணிகள் மேற்கொளவதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார்.

கூட்டத்தில் தாசில்தார் சிவப்பிரகாசம், உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News