உள்ளூர் செய்திகள்

ஏலகிரி மலையில் கரடி நடமாட்டம்

Published On 2023-06-07 08:59 GMT   |   Update On 2023-06-07 08:59 GMT
  • கிராம மக்கள் அச்சம்
  • ஆடு மேய்ப்பவர்களிடம் விசாரணை

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த மலையில் மான், மயில், கரடி, ஆமை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது.

இதில் கடந்த ஆண்டு ஏலகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள பொன்னேரி கிராமத்தில் கரடி நடமாட்டம் காணப்பட்டது.

அப்போது விறகு சேகரிக்கு சென்ற பெண் மற்றும் முதியவரை கரடி கடித்தது. காயமடைந்த வர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

இந்த நிலையில் இன்று காலை ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள மயில்பாறை கிராமத்தை சேர்ந்த சிலர் ஆடு மேய்ப்பதற்காக மலை அடிவாரத்திற்கு சென்றனர்.

அப்போது முருகர் கோவில் அருகே திடீரென வந்த கரடி ஆடுகளை கடிக்க முயன்றது.

இதனைப் பார்த்து அதிர்ச்சடைந்த ஆடு மேய்ப்பவர்கள், பதறி அடித்துக் கொண்டு ஊருக்குள் வந்து தகவலை தெரிவித்தனர்.

இதனால் கிராம மக்கள் மிகவும் அச்ச மடைந்து ள்ளனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மத்தான் ஆடு மேய்ப்பவர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags:    

Similar News