பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்திற்கு தொண்டு நிறுவனங்கள் நிதி உதவி கோரி விண்ணப்பிக்கலாம்
- கலெக்டர் தகவல்
- வேலூர் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் மூலம் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் விலங்குகள் நலனில் பாதுகாப்பு மற்றும் சேவை செய்யும் அக்கறை யுள்ள அமைப்புகள் கீழ்க்காணும் திட்டங்களை செயல்படுத்திட நிதி உதவி கோரி உரிய படிவத்தில் அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட காயமடைந்து தெருவில் சுற்றித்திரியும் பிராணிகள் மற்றும் விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ அறுவை சிகிச்சை அளிப்பதற்கு நிதி உதவி, தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்திட கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி போன்ற பணிகளை மேற்கொள்ள அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் விலங்குகள் நலனில் அக்கறை கொண்ட அமைப்புகள் நிதி உதவி பெற்றிட https://cms.tn.gov.in/sites/default/files/announcement/ahf_TNAWB_041122.pdf என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் வேலூர் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநரிடம் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.