உள்ளூர் செய்திகள்

ஆரம்ப சுகாதார நிலையத்தில் இணை இயக்குனர் ஆய்வு

Published On 2023-07-22 08:55 GMT   |   Update On 2023-07-22 08:55 GMT
  • கர்ப்பிணிகளுக்கு எடுக்கப்படும் ஸ்கேன் குறித்தும் கேட்டறிந்தார்
  • கருவில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்பதை தெரிவிப்பது சட்டத்திற்கு புறம்பானது என நோட்டீஸ் ஒட்ட வேண்டும்

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு சிகிச்சை பெற்றுவரும் காப்பிணிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மேலும் மருத்துவரிடம் கர்ப்பிணிகளுக்கு எடுக்கப்படும் ஸ்கேன் குறித்தும் கேட்டறிந்தார்.

கருவில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்பதை தெரிவிப்பது சட்டத்திற்கு புறம்பானது என தாய்மார்களுக்கு தெரியும் வகையில் நோட்டீஸ் ஒட்ட வேண்டும் என எடுத்துரைத்தார்.

தொடர்ந்து சிகிச்சைக்கு வந்த புறநோயாளிகளிடம், குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த ஆய்வின் போது அரசு டாக்டர்கள் இனியா, வித்தியா மற்றும் சுகாதார செவிலியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News