உள்ளூர் செய்திகள்
மினிவேனில் கடத்திய ரேசன் அரிசி பறிமுதல்
- 2½ டன் சிக்கியது
- ஜெயிலில் அடைப்பு
ஜோலார்பேட்டை:
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட குடிமை பொருள் பவங்கள் குற்றப்புலனாய்வு துறை டி.எஸ்.பி. நந்தகுமாருக்கு நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூரில் இருந்து ரேசன் அரிசி மூட்டைகள் வெளிமாநிலத்திற்கு கடத்த இருப்பதாக தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் பேரில் டி.எஸ்.பி. நந்தகுமார் சப் -இன்ஸ்பெக்டர் முத்தீஸ்வரன் தலமையிலான குழுவினர் பச்சூர் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியே வந்த மினி வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் அரசு வழங்கும் ரேசன் அரிசி சுமார் 2½ டன் இருப்பது தெரிய வந்தது அதனைத் தொடர்ந்து ரேசன் அரிசியை பறிமுதல் செய்து பச்சூர் உணவு பாதுகாப்பு குடோனில் ஒப்படைக்கப்பட்டது .
ரேசன் அரிசி கடத்தியதாக நாட்டறம்பள்ளி அருகே சொரக்காயல்நத்தம் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்பவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.