உள்ளூர் செய்திகள்

மாவட்ட செயலாளர் தேவராஜி எம்.எல்.ஏ. தலைமையில் மாணவரணி அமைப்பாளர் பதவிக்கு நேர்காணல் நடந்த காட்சி.

தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் பதவிக்கு நேர்காணல்

Published On 2023-09-29 08:55 GMT   |   Update On 2023-09-29 08:55 GMT
  • க.தேவராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
  • 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நகரம், ஒன்றிய, பேரூர் ஆகிய பகுதிகளில் தி.மு.க. மாணவரணியின் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் வாணியம்பாடி அடுத்த மாராப்பட்டு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

திருப்பத்தூர் மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மாணவரணி செயலாளர், காஞ்சிபுரம் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., மாநில மாணவரணி துணைச் செயலாளர்கள் சேலம் ரா.தமிழரசன், கா.அமுதரசன் ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.

இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 நகரம், 15 ஒன்றியம் மற்றும் 3 பேரூர் ஆகிய பகுதிகளுக்கான மாணவரணி அமைப்பாளர் மற்றும் 5 துணை அமைப்பாளர்கள் பதவிக்கு பெண்கள் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்து கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News