உள்ளூர் செய்திகள்

பசுமைக்காடு திட்டத்தில் இலவச மரக்கன்றுகள்

Published On 2023-01-20 09:46 GMT   |   Update On 2023-01-20 09:46 GMT
  • விவசாயிகள் பயனடையலாம் என இணை இயக்குனர் பேச்சு
  • 49 இடங்களில் சிறப்பு முகாம் நடந்தது

திருப்பத்தூர்:

கந்திலி ஒன்றியம் கும்மிடிகாம்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் அனைத்து துறைகள் ஒருங்கிணைந்த சிறப்பு முகாம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற அலுவலக முன்பு நடைபெற்றது.

முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கே.கோடீஸ்வரன் தலைமை வகித்தார், அனைவரையும் துணைத் தலைவர் இந்திராணி கோவிந்தராஜ் வரவேற்றார், முகாமை வேளாண்மை துறை இணை இயக்குனர் பாலா தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு பயிர் உரம், நுண்ணுயிர் கலவை, உளுந்து விதை, 350, தென்னங்கன்றுகளை வழங்கி பேசியதாவது:-

தமிழக அரசு வேளாண்மை துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது விவசாயிகளுக்கு பசுமை காடு வளர்ப்பு திட்டங்கில் இலவசமாக வேங்கை, ஈட்டி மசோங்கி, ரோஸ்வுட், நாட்டு தேக்கு, காட்டு மரம் உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை வழங்குகிறோம் பத்தாண்டுகள் வளர்ந்த பிறகு இதனை விற்று விவசாயிகள் பயனடையலாம் இதே போன்று மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு விவசாய பொருட்கள் மீது மதிப்பு கூட்டு வரி செய்து பொருட்களை விற்பனை செய்ய பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

விவசாயிகள் பண்ணை குட்டைகளை அமைத்து பயன்பெற வேண்டும், மேலும் பொறியியல் துறை சார்பில் மானியத்தில் சூரிய சக்தி இயங்கும் பம்பு செட்டுகள் வேளாண்இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. இவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பேசினார்.

நிகழ்ச்சியில் ஆத்மா தலைவர் முருகேசன், ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன், துணைத் தலைவர் மோகன்குமார், வேளாண் உதவி இயக்குனர் ராகினி, பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஆனந்தன், உதவி பொறியா ளர்கள் மகேந்திரவர்மன், மீன் வளர்ச்சித்துறை கால்நடை துறை தோட்டக்கலை துறை, வேளாண் வணிகத்துறை, ஊரக வளர்ச்சித் துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம் அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இறுதியில் வேளாண்மை அலுவலர் ஜேயசுதா நன்றி கூறினர்.

இதே போன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் 49 இடங்களில் சிறப்பு முகாம் நடை பெற்றது.

Tags:    

Similar News