- வாகன ஓட்டிகள் அவதி
- முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது.
ஏலகிரி மலை சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளாமானோர் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் ஏலகிரி மலை ஜோலார்பேட்டை நாட்டறம்பள்ளி பகுதியில் நேற்று முதல் சாரல் மழை பொழிந்து கரு மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
மேலும் தற்போது வரை யிலும் கருமேகத்துடனும் கடுமையான பனிப் பொலிவுடன் காட்சியளிக்கிறது. மேலும் எதிரே வரும் வாகன ஓட்டிகள் கண்ணுக்கே தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு பெய்து வருகிறது.
இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். மேலும் ஊட்டியில் இருக்கும் பருவநிலை போல் தற்போது ஏலகிரி மலையிலும் கடும் பனிப்பொழிவுடன் காணப்படுகிறது.
இன்று காலை விடிந்தும் வெகு நேரமாகியும் பனிப்பொழிவு இருந்ததால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகள் போட்டுக் கொண்டு செல்கின்றனர்.
கடும் பனிப்பொழிவில் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.