அடிப்படை வசதி குறைகள் இருந்தால் வாட்ஸ் அப்பில் தெரிவிக்கலாம்
- நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம்
- நகராட்சி ஆணையர் தகவல்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. மேலும் இங்கு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள பொது மக்களின் சுகாதாரம் குடிநீர் விநியோகம் தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நகராட்சி நிர்வாகம் மூலம் துறை அதிகாரிகளால் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
மேலும் தற்போது அனைத்து வார்டுகளிலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு பொதுமக்களின் தேவைகள் மற்றும் கோரிக்கைகளை கண்டறிந்து நகராட்சி அலுவலகத்தில் நடைபெறும் நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நகராட்சி ஆணையாளர் பழனி பொதுமக்களுக்கு அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
அதில் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதியில் பொது சுகாதாரம், குடிநீர் விநியோகம், மழை நீர் தேங்கியுள்ள இடங்கள், தெரு விளக்குகள் போன்ற அடிப்படை வசதிகளில் குறைபாடு இருந்தால் 73973 92675 (நகராட்சி ஆணையாளர்), 73973 92676 (நகராட்சி பொறியாளர்), 8248887937 துப்புரவு ஆய்வாளர் (பொறுப்பு) வாட்ஸ் அப் எண்ணிற்கு பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.