உள்ளூர் செய்திகள்

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் சோதனை செய்த காட்சி.

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் தீவிர சோதனை

Published On 2023-08-14 09:20 GMT   |   Update On 2023-08-14 09:20 GMT
  • சுதந்திர தின விழா முன்னிட்டு நடவடிக்கை
  • போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

ஜோலார்பேட்டை:

நாடு முழுவதும் நாளை 76-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி ஒட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

குறிப்பாக பேருந்து நிலையங்கள், விமான நிலையம், ரெயில் நிலயங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தனியார் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் நகரின் முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து, போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், சுப்பிரமணி, உஷாராணி உள்ளிட்ட ரெயில்வே போலீசார் நேற்று முதல் ரெயில் நிலையங்களில் உள்ள அனைத்து பிளாட்பாரங்கள், தண்டவாளங்கள் பயணிகளின் இருக்கைகள், உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News