மாணவர்களின் அறிவியல் கண்காட்சியை பார்வையிட்ட இஸ்ரோ விஞ்ஞானிகள்
- முதல் பரிசு பெறும் மாணவர்களை இஸ்ரோவுக்கு அழைத்து செல்ல உள்ளனர்
- ஏராளமானோர் கலந்து கொணடனர்
திருப்பத்தூர்:
ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் அருகே உள்ள யுனிவர்சல் மெட்ரிகுசன் பள்ளி சார்பில் அறிவியல் கண் காட்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி சேர்மன் டாக்டர் எம்.. சிவப்பிரகாசம் தலைமை வகித்தார்.
தாளாளர் தீபா சிவப்பிரகாசம் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் கிரிநாத் வரவேற்றார். கண்காட்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் (இஸ்ரோ) எச்.போஜ்ராஜ். பி.சோமா. எம்.வி. கண் ணன், டி.கே.சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் தனியார் பள்ளி மாணவர்களின் அனைத்து கண்டுபிடிப் புகள் அடங்கிய 4 அரங்குகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இதில் மங்கள்யான், இன்சாட், உப்பு நீரில் இயங்கும் இரு சக்கர வாகனம், உப்பு நீரில் இயங்கும் வெல்டிங் மெஷின், இருதய துடிப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை உணர்வு பூர்வமாக செய்து இருந்தனர்.
அந்த அரங்குகளை பார்வையிட்டு 4 அரங்குகளில் சிறந்த அரங்கு என்று தேர்ந்தெடுத்து முதல் பரிசு பெறும் அரங்கு மாண வர்களை இஸ்ரோவுக் கும், இரண்டாம் பரிசு பெறும் மாணவர்களை ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் அழைத்து செல்ல உள்ளனர்.
ஒவ்வொரு மாணவர்களுக்குள் அடங்கிய திறமைகளுக்கு ஏற்ப பயிற்சி அளித்து அவர்களை வரும் காலத்தில் சிறந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களாக உருவாக்க திட்டமிட்டு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரி வித்துள்ளனர்.
இந்த நிகழ்வில் பெற்றோர்கள், பொதுமக்கள் மாணவர்களின் கண்டு பிடிப்பை ஆச்சர்யத்து டன் பார்த்து சென்றனர்.
இந்த நிகழ்வில், பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் 'கலந்து கொண்டனர். இதில் பள்ளி துணை முதல்வர் இளங்கோவன் நன்றி கூறினார்.