அரசு மருத்துவமனையில் இணை இயக்குனர் திடீர் ஆய்வு
- வருகை பதிவேடு குறித்து ேசாதனை
- சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்
ஜோலார்பேட்டை:
நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள கலைஞர் தெருவில் அமைந்துள்ள நாட்டறம்பள்ளி அரசு பொது மருத்துவ மனையில் தினம்தோறும் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதார மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திடீரென்று நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார் .
அப்போது டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் வருகை பதிவேடு குறித்து ஆய்வு செய்தார்.
அதன் பிறகு சிகிச்சை பெற்று வரும் வார்டு பகுதிக்கு சென்று மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சை குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்.
புறநோயாளிகளிடமும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிகள் உள்பட அனைவருக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என இணை இயக்குநர் மாரிமுத்து கூறினார்.
இந்த ஆய்வின் போது நாட்டறம்பள்ளி அரசு டாக்டர் சாந்தினி சுகாதார செவிலியர்கள் பணியா ளர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.