உள்ளூர் செய்திகள்
- மருத்துவ சிகிச்சை அளித்தனர்
- பயனாளிகளுக்கு ஊனம் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு ஊனம் தடுப்பு முகாம் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் நடைபெற்றது.
இதில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தொழுநோய் மருத்துவ துணை இயக்குநர் பிரீத்தா தலைமையிலான மருத்துவ குழுவினர் தொழுநோய் பாதிப்புக்குள்ளான வர்களை பரிசோதனை செய்து மருத்துவ சிகிச்சை அளித்தனர்.
பயனாளிகளுக்கு ஊனம் ஏற்படாமல் இருக்க எம். சி.ஆர் காலணிகள், ஊன்றுகோல் உள்ளிட்ட ஊனம் தடுப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்த முகாமின் போது தொழுநோய் மருத்துவ அலுவலர் வெற்றிச் செல்வி வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.