திருப்பத்தூர் மாவட்டத்தில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்
- தொடர்மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை
- பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று மதியம் 12 மணி முதல் மழை பெய்ய தொடங்கி தொடர்ந்து லேசானமழை பெய்தது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது திருப்பத்தூர், மாவட்டத்தில் திருப்பத்தூர் நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கியது.
பல்வேறு இடங்களில் கழிவுநீர் கால்வாய்களில் தண்ணீர் வீடுகளில் புகுந்தது. இதேபோன்று ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, ஆலங்காயம், வாணியம்பாடி, ஆம்பூர், உள்ளிட்ட பகுதியில் லேசான மழை பெய்தது திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவமழை ஒட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் மழை நீர் தேங்காத வண்ணம் மின் மோட்டார் மரம் அறுக்கும் கருவி, கயிறுகள், மணல் மூட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
குடிசை வீட்டு பகுதிகளில் உள்ளவர்கள் அப்பகுதிகளில் உள்ள சமுதாயக்கூடம் அரசு பள்ளிகளில் தங்க வைத்துக்கப்பட்டு மருத்துவம் மற்றும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூரில் இன்று காலை முதல் மழை இல்லாவிட்டாலும் வானிலை அறிக்கையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மழை மற்றும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு அலார்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கி வரும் நடுநிலைபள்ளிகளுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா விடுமுறை அளித்துள்ளார் திருப்பத்தூர் மாவட்டத்தில் பதிவான மழை விவரம் மில்லி மீட்டரில் வருமாறு;
ஆம்பூர் 12.20, ஆம்பூர் சர்க்கரை ஆலை 16.20, ஆலங்காயம் 1.20, வாணியம்பாடி 5.10, திருப்பத்தூர் சர்க்கரை ஆலை 6.20, திருப்பத்தூர் 11.20 மழை அளவு பதிவாகியுள்ளது. திருப்பத்தூர் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.
இதேபோன்று ஆண்டியப்பனூர் அணைகொள்ளளவு எட்டி நீர் நிரம்பி வழிகிறது.