உள்ளூர் செய்திகள்

நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையம் பொதுமக்கள் முற்றுகை

Published On 2023-09-23 09:01 GMT   |   Update On 2023-09-23 09:01 GMT
  • நடன நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க வலியுறுத்தினர்
  • மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதி வழங்கப்பட்டது

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி, ஏரியூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இன்று மாலை ஆடல், பாடல் நடன நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டு அப்பகுதி மக்கள் போலீஸ் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

அதன்படி ஏரியூர் கிராமத்தில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடன நிகழ்ச்சி நடத்திக் கொள்ள தமிழ்நாடு போலீஸ்துறை இயக்குனரின் சுற்றறிக்கை படி வாணியம்பாடி டி.எஸ்.பி. விஜயகுமார் அனுமதி வழங்கினர்.

நடன நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை கிராம மக்கள் ஒன்று கூடி விறுவிறுப்பாக செய்தனர்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் நடன நாட்டிய நிகழ்ச்சி நடத்த கூடாது என நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து போலீசார் ஆடல், பாடல் நடன நிகழ்ச்சி நடத்த தடை செய்யப் போவதாக அறிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று கூடி நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் திரண்டனர். மேலும் ஆடல் பாடல் நடன நிகழ்ச்சியை நிறுத்தக்கூடாது. தொடர்ந்து நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொதுமக்களிடம் சமரசம் பேசின ர். மேலும் உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்து நடன நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News