உள்ளூர் செய்திகள்

முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்திய போது எடுத்த படம்.

வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

Published On 2022-11-10 10:03 GMT   |   Update On 2022-11-10 10:03 GMT
  • வீட்டு மனைபட்டா வழங்க வலியுறுத்தல்
  • போலீசார் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டு கலைந்து சென்றனர்

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த நாராயணபுரம் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

ஆந்திரா மற்றும் தமிழ்நாடு எல்லை பகுதியில் அமைந்துள்ள ஜவ்வாது ராம சமுத்திரம் மலையை ஒட்டி மூளவட்டம், தனி காலனி, மதுகொள்ளி, மலை வட்டம், பனந்தோப்பு வட்டம், சந்தகாமணி, உள்ளிட்ட கிராமத்தை பொதுமக்கள் சுமார் 60 ஆண்டு காலமாக அப்பகுதியில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதற்கு முன்பாக இப்பகுதி மக்கள் பணம் கட்டி வீட்டு ரசிது, மின் இணைப்பு ஆகியவற்றை பெற்றுள்ள னர். ஆனால் பகுதி மக்கள் தற்போது பணம் கட்டி வீட்டு ரசிது கேட்கும் போது ஊராட்சி செயலர் ஜெயசுதா அந்த இடம் ஆந்திர பகுதிக்கு சொந்தமானது எனவும் எனவே தற்போது அதற்கு வீட்டு வரி கொடுக்க முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் நாட்டறம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை திடீரென முற்றுகை யிட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் வெண்மதி முனிசாமி மற்றும் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பொது மக்களுடைய பேச்சு வார்த்தை நடத்தி இது குறித்து அதிகாரிகளிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News