விபத்துக்களை தடுக்க பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்
- போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தகவல்
- விபத்து நடந்த இடத்தில் ஆய்வு
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்டத்தில் போலீசார் மூலம் விபத்துக்களை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் தேசிய நெடுஞ்சாலைகள் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெக்குந்தி என்ற இடத்தில் ஒரு வங்கியின் துணை மேலாளர் உட்பட 2 பேர் பலியானார்கள். அந்த விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்ற மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விபத்திற்கான காரணம் குறித்தும், விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்தும், அப்பகுதி பொதுமக்களிடமும், தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் விபத்து ஏற்படாமல் இருக்க பொதுமக்கள், இளைஞர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க முன் வரவேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
ஆய்வின் போது தேசிய நெடுஞ்சாலை மேலாளர் மற்றும் வாணியம்பாடி தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் உடன் இருந்தனர்.