உள்ளூர் செய்திகள்

ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம்அகற்றிய காட்சி.

3-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2023-11-17 09:59 GMT   |   Update On 2023-11-17 09:59 GMT
  • அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது
  • 40 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டன

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் பேரூராட்சியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புகளை அவர்களே அகற்றிக் கொள்ள, கால அவகாசம் வழங்கப்பட்டது.

இருப்பினும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனை தொ டர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்கூட்டியே அவர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நெடுஞ்சாலை துறை திருப்பத்தூர் உதவி கோட்ட பொறியாளர் அன்பு எழில், உதவி பொறியாளர் ஞானசேகர் மற்றும் வருவாய் துறையினர் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்.

ஆலங்காயம் பஸ் நிலையம் முதல் ராஜபா ளையம் கூட்ரோடு வரை, ஜமுனாமரத்தூர் செல்லும் சாலை, வாணியம்பாடி சாலை திருப்பத்தூர் சாலை ஆகிய இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து இன்றும் 3-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களுக்கும், போக்கு வரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

Tags:    

Similar News