உள்ளூர் செய்திகள்

தார் சாலை அமைக்கும் பணியை நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

திருப்பத்தூர் உழவர் சந்தையில் சுய உதவிக் குழுக்களுக்கு கடை ஒதுக்கீடு

Published On 2022-06-11 08:20 GMT   |   Update On 2022-06-11 08:20 GMT
  • 12 பெண்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும்
  • கலெக்டர் உத்தரவு.

திருப்பத்தூர்:

திருப்பத்தூரில் இயங்கிவரும் உழவர் சந்தையில் பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட மகளிர் குழுவிற்கு உழவர் சந்தையில் காய்கறி கடைகள் வைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து எப்எப்ஸ்டார் மகளிர் சுய உதவி குழுவிற்கு புதியதாக உழவர் சந்தையில் கடை ஒதுக்கப்பட்டது.

உழவர் சந்தையில் உள்ளகடையின் திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக இந்தியன் வங்கி மைக்ரோசேட் மேலாளர் சங்கமித்ரா திறந்துவைத்து பேசினார். பிரீடம் பௌண்டேஷன் இயக்குனர் ராமச்சந்திரன் காய்கறி விற்பனையை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பல்வேறு மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள், வேளாண்மைத் துறையினர், கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சுய உதவி குழுக்களுக்களை சேர்ந்த பெண்கள் கூறியதாவது:-

இந்த கடையின் மூலம் 12, பெண்களின் வாழ்வாதாரம் மேம்பாடு அடையும் மேலும் பெண்கள் மத்தியில் தொழில் செய்யும் ஆர்வம் உண்டாகும்.

இதன் மூலம் அவர்க ளுடைய வாழ்வாதாரம் மேம்படும், இந்த வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மை துறையினருக்கு பெண்கள் சுய உதவி குழுக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறினர்.

Tags:    

Similar News