ரூ.61 லட்சத்தில் துணை சுகாதார நிலையம்
- எம்பி, எம்.எல்.ஏ. பூஜை போட்டு தொடங்கி வைத்தனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் தாலுகா விஷமங்கலம் அருகே சித்தேரி கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி, ரூ.14 லட்சத்தில் கட்டும் பணிக்கு மக்கள் பங்களிப்புக்காக ரூ .2 லட்சத்து 80 ஆயிரத்தை சி.என்.அண்ணாதுரை தனது சொந்த செலவில் அரசுக்கு வழங்கினார்.அதனை ஒட்டி மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணி சித்தேரி கிராமத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் ஹேமலதா வினோத்குமார் தலைமை வகித்தார் அனைவரையும் வட்டார வளர்ச்சி அலுவலர் துரை வரவேற்றார், பூமி பூஜை கட்டும் பணியை திருவண்ணாமலை தொகுதி சி.என்.அண்ணாதுரை எம்பி, நல்லதம்பி எம்எல்ஏ, பூமி பூஜை போட்டு கட்டும் பணி தொடங்கி வைத்து பேசினர். இதில் ஒன்றிய செயலாளர்கள், கே. எஸ். ஏ.மோகன்ராஜ், கே எஸ். குணசேகரன், கே. முருகேசன், ஒன்றிய குழு தலைவர் திருமதி, துணைத் தலைவர் ஜி.மோகன்குமார், கூட்டுறவு சங்க தலைவர்கள், குலோத்துகன், ராஜா, சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் அழகிரி, உட்பட பலர் கலந்து கொண்டனர் இறுதியில் ஆர். தசரதன் நன்றி கூறினார்.
இதேபோன்று ஆதி சக்தி நகரில் ஊராட்சி ஆரம்பப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் ரூ7.80 லட்சம் செலவிலும், ராவுத்தம்பட்டி கிராமத்தில் துணை சுகாதார நிலையம் கட்டும் பணி ரூ 30 லட்சம் செலவில், ஆதியூர் ஆலமரத்து வட்டம் பகுதியில் தரைக்கற்கள் ரூ 8 லட்சம் செலவில் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை போட்டு பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்தகுமார் தலைமை வகித்தார்.
அனைவரையும் துணை தலைவர் ஏ.பி பழனிவேல், வரவேற்றார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார்.
பூமி பூஜை போட்டு பணிகளை சி.என்.அண்ணாதுரை எம்பி, ஏ. நல்லதம்பி எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் கே.ஏ. குணசேகரன், தொடங்கி வைத்து பேசினர்.நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தீபா, வக்கீல் மாது, அவைத் தலைவர் ஜெகதீசன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.