உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூர் வனத்துறை சார்பில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடந்த காட்சி.

திருப்பத்தூர் ஏரிகளில் அரிய வகை பறவைகள் கணக்கெடுப்பு

Published On 2023-01-30 09:44 GMT   |   Update On 2023-01-30 09:44 GMT
  • 2 நாட்கள் பணி நடைபெற்றது
  • சிவப்பு தலை வாத்து உள்பட அரிய வகை பறவைகள் உள்ளன

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முக் கிய நீர்நிலைகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி 2 நாள் கள் நடைபெற்றது.

தமிழக வனத்துறை மூலம் ஜன.28, 29-ஆம் தேதிகளில் பற வைகள் கணக்கெடுக்கும் பணி தமிழ்நாடு முழுவதும் நடை பெற்று வருகிறது. இந்த நிலை யில், திருப்பத்தூர் மாவட்டத் தில் உள்ள திருப்பத்தூர் பெரிய ஏரி, சமணபுதூர் ஏரி, குறும் பேரி, மடவாளம் ஏரி உள்ளிட்ட முக்கிய நீர் நிலைகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கணக் கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

களப் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். குறிப்பிட்ட ஏரிகளில் சிறிய மீன் கொத்தி - 10, வெண்மார்பு மீன் கொத்தி - 12, சமட்டி வெள்ளை மீன் கொத்தி - 15, சிறிய கொக்கு - 10, பெரிய கொக்கு -10, நடுத்தர கொக்கு - 15, இறா கொக்கு - 30, நீர்காகம் (சிறிய, பெறிய, நடுத்தர) - 50, பாம்பு தாரா - 4, சிறவி - 50, முக்குளியப்பான் - 20, அறிவாள் மூக்கன் - 20, நீல தாழை கோழி- 50, கானாங் கோழி - 10, நாறை 5, மஞ்சள் அழகு ஆள்காட்டி - 12, சிவப்பு அழகு ஆள்காட்டி - 15, சிவப்பு தலை வாத்து - 60 ஆகிய பறவைகள் கணக்கெடுக்கப்பட்டன.

Tags:    

Similar News