வனத்துறையினர் வாகனத்தை சிறைப்பிடித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம்
- 10 ஆடுகள் பலியானதால் ஆத்திரம்
- கிராமத்தை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது
ஆலங்காயம்:
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக மர்ம விலங்கு ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறுவது தொடர்கதையாக உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதனாஞ்சேரி ஊராட்சியை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் சாவித்திரி தனது வீட்டில் 20 ஆடுகளை வளர்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ஆடுகளை கொட்டகைகள் கட்டி வைத்திருந்தார். நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த மர்ம விலங்கு, கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 13 ஆடுகளை கடித்து குதறியது. இதில் 10 ஆடுகள் அங்கேயே பலியானது. தகவலறிந்து வந்த வாணியம்பாடி வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து வனத்துறையினர் அந்த கிராமத்தில் நேற்று இரவு 11 மணி வரை முகாமிட்டு, தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
வனத்துறையினருடன் சேர்ந்த கிராம மக்களும் இரவு தூக்கமின்றி விடிய, விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் ஆடுகளை கடித்துக் குதறியது நாய்கள் என்று கிராம மக்களிடம் கூறிவிட்டு வனத்துறையினர் அங்கிருந்து புறப்பட முயன்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வனத்து றையினர் வாகனத்தை சிறைப்பிடித்து, வனத்துறை யினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இங்கு ஏதோ ஒரு வன விலங்கு நட்டமாட்டம் உள்ளது, அது என்ன விலங்கு என்று கண்டறிந்து கிராம மக்களுக்கு பாது காப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி அதிகாரிக ளுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து அந்த கிராமத்தை சுற்றி ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.