இயற்கை விவசாயம் செய்வது குறித்து பயிற்சி
- மண்புழு தயாரிப்பது குறித்து செயல் விளக்கம்
- வேளாண்மை துறை சார்பில் நடந்தது
ஜோலார்பேட்டை:
திரும்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஊராட்சிக்கு உட்பட்ட நிலாவூர் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் இயற்கை விவசாயம் செய்வது குறித்து பயிற்சி கூட்டம் நடந்தது. மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கண்ணகி தலைமை தாங்கினார்.
ஜோலார்பேட்டை வட்டார உதவி இயக்குனர் வேல்முருகன், உதவி வேளாண்மை அலுவலர் அனிதா, திட்ட ஒருங்கிணைப்பாளர் சத்யபிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் அலுவலர் ராஜா வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன் கலந்து கொண்டு பேசினார். விவசாயிகள் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் ரசாயனம் மற்றும் பூச்சி கொல்லி கலப்பில்லதா இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து விவசாயிகளுக்கு மண்புழு தயாரிப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.