உள்ளூர் செய்திகள்

மறியலில் ஈடுபட்டவர்களுக்கு உடனடியாக 300 வாட்டர் கேன்களை நகராட்சி கவுன்சிலர் வெற்றி கொண்டான் வழங்கினார்.

குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியல்

Published On 2022-10-02 09:13 GMT   |   Update On 2022-10-02 09:13 GMT
  • 300 குடும்பங்களுக்கு குடிநீர் கேன் சப்ளை
  • அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் நகராட்சி 36-வது வார்டுக்கு உட்பட்ட குடியரசு நகர் பகுதியில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியல் செய்தனர்.

10 வருடங்களுக்கு முன்பு இந்த பகுதி சேர்க்கப்பட்டு எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை.

காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் இந்த பகுதிக்கு வருவதில்லை ஆகையால் லாரியில் நகராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

கடந்த ஒரு மாதமாக குடிநீர் இல்லாமல் மிகவும் அவஸ்தை படுகிறோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் வெற்றிகொண்டான் பொதுமக்களிடம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினார். உடனடியாக 300, குடிநீர் வாட்டர் கேன் தருவித்து அப்பகுதி மக்களுக்கு வழங்கினார்.

குடிநீர் கேட்டு பெண்கள் மறியல் ஈடுபட்ட போது தனது சொந்த செலவில் 300 குடும்பங்களுக்கு குடிநீர் கேன் வழங்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News