உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

பட்டாசு கடை வைக்க விண்ணப்பிக்கலாம்

Published On 2023-10-20 09:42 GMT   |   Update On 2023-10-20 09:42 GMT
  • கலெக்டர் தகவல்
  • இ-சேவை மையம் மூலம் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்பும் நபர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது இ-சேவை மையம் மூலம் விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்து, ஆவணங்களை இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அதாவது, பட்டாசு கடை வைக்க விரும்பும் நபர்கள் பாஸ்போர்ட் போட்டோ ஆதார் அட்டை, உரிம கட்டணம் ரூ.500 (அரசு கருவூலத்தில் செலுத்தும் சீட்டு மூலம்), பதிவு செய்யப்பட்ட குத்தகை ஆவணம், சொந்த கட்டிடமாக இருந்தால் மனுதாரர் பெயரில் உள்ள பட்டா, வாடகை கட்டிடமாக இருந்தால் வாடகை ஒப்பந்த பத்திரம், உள்ளாட்சி அமைப்பினரிடமிருந்து பெற்ற பல்வகை வரி ரசீது, சுய உறுதிமொழி பத்திரம், கட்டிட அமைவிட வரைபடம் அல்லது கட்டிட திட்ட அனுமதி (ஏ4 அளவில்), விண்ணப்பங்களை வரும் 24-ந் தேதி வரை மட்டுமே இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

அதன் பிறகு பெறப்படும். விண்ணப்பங்கள் எந்த காரணத்தை கொண்டும் ஏற்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News