100 நாள் திட்ட பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ. 600 வழங்க கோரிக்கை
- விவசாய தொழிலாளிக்கு தேசிய அளவில் ஒருங்கிணைந்த மத்திய சட்டமும் தனித்துறையை உருவாக்கக் வேண்டும்.
- விவசாய தொழிலாளிக்கு இலவச வீட்டு மனை தொகுப்பு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்
அவினாசி :
அவினாசியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய மாநாடு நடைபெற்றது. அதில் கிராமப்புற 100 நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளிக்கு தினசரி கூலி ரூ. 600 வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:- விவசாய தொழிலாளிக்கு தேசிய அளவில் ஒருங்கிணைந்த மத்திய சட்டமும் தனித்துறையை உருவாக்கக் வேண்டும். சொந்தமாக இடமோ வீடு இல்லாத விவசாய தொழிலாளிக்கு இலவச வீட்டு மனை தொகுப்பு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். கிராமப்புற தொழிலாளர்களின் குடும்பங்கள் சிறு குறு தொழில்கள் செய்திடவும், கால்நடைகள் வளர்ப்பில் கிராமப்புற தொழிலாளர்களின் குடும்பங்கள் சிறு குறு தொழில்கள் செய்திடவும், கால்நடைகள் வளர்ப்பில் கூட்டுறவு வங்கிகள் மூலம் மானியத்தில் கடன் வழங்க வேண்டும்.
தேசிய வேலை உறுதி திட்டத்தில் வேலை நாட்கள் 200 ஆக உயர்த்தி இதில் பணியாற்றும் தொழிலாளிக்கு கூலி உயர்வு ரூ.600 வழங்க வேண்டும். ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் வேலை வழங்குவதை கைவிட்டு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை பூண்டி நகராட்சி ,அவினாசி பேரூராட்சி பகுதிகளில் அமல்படுத்த வேண்டும். சேவூர் பகுதியில் 30 வருடங்களுக்கு முன்பு இலவச வீட்டு மனை வழங்கிய இடத்தை வகை மாற்றம் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரமாகவும் சரியான அளவில் வழங்க வேண்டும். 60 வயதான அனைவருக்கும் முதியோர் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழுதடைந்துள்ள அரசு தொகுப்பு வீடுகளை பராமரிப்பு செய்ய ரூ.2 லட்சம் மானியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.